முடி உதிர்வை தடுத்து கட்டுக்கடங்காத முடி வளர்ச்சி தரும் சிறந்த எண்ணெய் !
Hair Growth
Beauty
By Shalini Balachandran
முடி வளர்ப்பது என்பது தற்போது அனைவருக்கும் இருக்கும் ஒரு ஆசைதான்.
இருந்தாலும் பலபேருக்கு வழுக்கை, முடி உதிர்தல் மற்றும் வறண்ட முடி போன்ற பிரச்சனைகள் காரணமாக முடி கொட்டி விடுகின்றன.
இந்தநிலையில், நீளமான கூந்தல் வளர்ச்சிக்கு உதவும் சிறந்த வகை எண்ணெய் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- சின்ன வெங்காய சாறு- 5 ஸ்பூன்
- ஆமணக்கு எண்ணெய்- 2 ஸ்பூன்
செய்முறை
- வெங்காய சாறு மற்றும் ஆமணக்கு எண்ணெயை ஒன்றாக சேர்த்து கலக்கவும்.
- பின் இந்த கலவையை உச்சந்தலையில் மற்றும் முடி மீது நன்கு தடவவும்.
- அடுத்து 4 நிமிடங்கள் மெதுவாக கைகளை வைத்து நன்கு மசாஜ் செய்யவும்.
- இறுதியாக சுமார் 2 மணி நேரம் கழித்து, லேசான ஷாம்பு கொண்டு தலைமுடியைக் கழுவவும்.
தேவையான பொருட்கள்
- சின்ன வெங்காய சாறு- 5 ஸ்பூன்
- முட்டை- 1
- லாவெண்டர் எண்ணெய்- 2 சொட்டு
செய்முறை
- முதலில் முட்டையை வெங்காய சாறுடன் கலக்கவும்.
- பின் அதில் 3 சொட்டு லாவெண்டர் எண்ணெயைச் சேர்த்து நன்றாக கலக்கவும்.
- இறுதியாக தலைமுடியில் தடவி 30 நிமிடங்கள் விட்டுவிட்டு லேசான ஷாம்பு கொண்டு தலைமுடியைக் கழுவவும்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


பிரிட்டனின் தடை… சிறிலங்காவுக்கு அடுத்த நெருக்கடியா… 6 நாட்கள் முன்

உலகில் பெண் விடுதலையை சாத்தியப்படுத்திய தலைவர் பிரபாகரன்…
3 வாரங்கள் முன்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி