நுங்குக்காக பனை மரம் ஏறிய குடும்பஸ்தருக்கு நடந்த அவலம்!
Sri Lanka Police
Jaffna
Sri Lanka
By pavan
யாழ்ப்பாணத்தில் பனை மரத்தில் ஏறி தவறி விழுந்த இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நேற்று முன்தினம் (09.04.2024) இடம்பெற்றுள்ளது.
கைதடி பகுதியைச் சேர்ந்த 41 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையான செல்வராசா கேதீஸ்வரன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த நபர் வெளிநாட்டில் இருந்து வந்த விருந்தினர்களுக்கு நுங்கு பறிப்பதற்காக பனை மரத்தில் ஏறிய போது தவறி வீழ்ந்து படுகாயமடைந்துள்ளார்.
மேலதிக விசாரணை
இந்த நிலையில் அவரை சாவகச்சேரி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனைத் தொடர்ந்து உடற் கூற்று பரிசோதனைக்கு பிறகு சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 15 மணி நேரம் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
4 நாட்கள் முன்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்