பண்டோரா ஆவண சர்ச்சை- மேலும் 65 இலங்கையர்களின் பெயர்கள் விரைவில்
உலகையே அதிரவைத்துள்ள பண்டோரா ஆவணங்கள் இலங்கையிலும் பெரும்சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
முன்னாள் அமைச்சர் நிருபமா ராஜபக்ச மற்றும் அவரது கணவர் தொடர்பான தகவல் வெளியான நிலையிலேயே ஆளும் தரப்பு உட்பட அனைவர் மத்தியிலும் இந்த சர்ச்சை வெடித்துள்ளது.
இந்த நிலையில் மேலும் 65 இலங்கையர்களின் பெயர்கள் இன்னும் வெளியிடப்படவுள்ளது என்று நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன(Rajitha Senaratne) மற்றுமொரு அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.
இதுவரை கசிந்த ஆவணங்களுக்குக் குறிப்பிட்ட காலக்கெடு எதுவும் குறிப்பிடப்படவில்லை என்றும் இதேவேளை, எந்தவொரு தொழிலதிபரும் எங்காவது பணத்தை வைப்பு செய்துள்ளமை குறித்து நாட்டின் ஜனாதிபதி எப்படிப் பொறுப்பேற்பார் என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதைத் தெரிவித்துள்ளார்.