உடன் ஆரம்பியுங்கள் கோட்டாபய இன்று காலை விடுத்த உத்தரவு
gotabaya
inquary
pandora documents
By Sumithiran
சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள பண்டோரா ஆவணங்கள் குறித்து உடனடியாக விசாரணைகளை ஆரம்பிக்குமாறு அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ஸ,(gotapaya Rajapaksa) இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இன்று (06) காலை இந்த உத்தரவை பிறப்பித்துள்ளதாக அமைச்சரவை பேச்சாளர், அமைச்சர் டளஸ் அழகபெரும(dullas alagaperuma) தெரிவித்துள்ளார்.
இந்த விசாரணைகளை ஒரு மாத காலத்திற்குள் நிறைவு செய்து, விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்குமாறும் அவர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இதேவேளை, பண்டோரா ஆவணங்களில் அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் எவரும் கிடையாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.