பண்டோரா ஆவணங்கள் விவகாரம்! கோட்டாபய பிறப்பித்துள்ள உத்தரவு
Gotabaya Rajapaksa
SriLanka
Dullas Alagaperuma
Pandora Documents
By Chanakyan
பண்டோரா ஆவணங்கள் குறித்து உடனடியாக விசாரணைகளை ஆரம்பிக்குமாறு சிறிலங்கா அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச (Gotabaya Rajapaksa) உத்தரவிட்டுள்ளார்.
இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு இன்று காலை இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
இந்த விடயத்தினை அமைச்சரவை பேச்சாளரும் ஊடகத்துறை அமைச்சருமான டளஸ் அழகபெரும (Dullas Alagaperuma) உறுதிப்படுத்தியுள்ளார்.
இது தொடர்பில் தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில்,
இந்த விசாரணைகளை ஒரு மாத காலத்திற்குள் நிறைவு செய்து கொள்ள வேண்டும் எனவும் உடனடியாக விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்குமாறும் சிறிலங்கா அரச தலைவர் உத்தரவிட்டுள்ளார்.
இதேவேளை, பண்டோரா ஆவணங்களில் அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் எவரும் கிடையாது என அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.