ஹர்திக் பாண்டியாவின் தலைமைத்துவம் தொடர்பில் சங்கக்கார வெளியிட்ட கருத்து!
டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் விளையாடுவதற்காக இலங்கை கிரிக்கெட் அணி இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது.
இலங்கையுடனான டி20 போட்டிகளுக்கு இந்திய அணிக்கு தலைவராக ஹர்திக் பாண்டியா செயற்படுகின்றார்.
இந்தநிலையில், ஹர்திக் பாண்டியாவின் தலைமைத்துவம் தொடர்பில் இலங்கை அணியின் முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான் குமார் சங்கக்கார தனது கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.
ஹர்திக் பாண்டியா
தலைமைத்துவத்தில் ஏற்படும் மாற்றம், புதிய தலைவருடன் அணி விளையாடுவது என்பன மிகுந்த சவாலான விடயம் என இலங்கை அணியின் முன்னாள் தலைவரும் நட்சத்திர துடுப்பாட்ட வீரருமான குமார் சங்கக்கார தெரிவித்துள்ளார்.
அந்தவகையில், இந்திய அணி நிர்வாகம் அணியின் தலைமைப் பொறுப்பை ஹர்திக் பாண்டியாவிடம் ஒப்படைத்துள்ளது, அணியை சிறப்பாக வழி நடத்தும் பொறுப்பு ஹர்திக் பாண்டியாவிடம் நிறைவாக உள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
சங்கா புகழாரம்
இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து போன்ற பலமான அணிகள் கூட தலைமைத்துவம் மாற்றப்பட்டபோது மிகுந்த சவால்களை சந்தித்தன, இருப்பினும் ஹர்திக் பாண்டியா மிக எளிதாக தலைமைப் பொறுப்பை கையாள்வார் என நினைக்கிறேன் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இளம் வீரர்களை உள்ளடக்கிய இலங்கை அணியை கட்டுப்படுத்தும் ஆற்றல் நிறைவாக அவரிடம் உள்ளதாக இலங்கை அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் குமார் சங்கக்கார ஹர்திக் பாண்டியாவை புகழாரம் சூட்டியுள்ளார்.


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 2 நாட்கள் முன்
