மின்சார ரசீதுகள் அச்சிடுவதையும் பாதிக்கும் காகித தட்டுப்பாடு!
PAPER SHORTAGE
ELECTRICITY BIL;L
By Kanna
காகித தட்டுப்பாடு காரணமாக மின்சார ரசீதுகளை அச்சிடுவதில் தடை ஏற்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
மின் பாவனையாளர்களுக்கு கையால் எழுதி ரசீதை வழங்குமாறு மீட்டர் கண்காணிப்பாளர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக அதன் மேலதிக பொது முகாமையாளர் அன்ட்ரூ நவமணி(Andrew Navamani) ஊடக சந்திப்பின் போது தெரிவித்தார்.
மின்சாரக் கட்டணங்கள் தொடர்பில் ஏதேனும் பிரச்சினைகள் இருப்பின் இலங்கை மின்சார சபையின் இணையத்தளத்திற்குச் சென்று அவ்வாறான பிரச்சினைகளை தீர்த்துக்கொள்ள முடியும் என அவர் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை, இலத்திரனியல் கட்டண முறைமையொன்றை அமைக்குமாறு இலங்கை மின்சார சபைக்கு பணிப்புரை வழங்கப்பட்டுள்ளதாக மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சின் செயலாளர் வசந்த பெரேரா தெரிவித்துள்ளார்.

1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி