3 மாவீரர்களின் பெற்றோர்! இன்றைய அவல நிலை
மண்ணிற்காக்கவும் மக்களிற்காகவும் பிள்ளைகளை தியாகம் செய்து இன்று கவனிப்பார் அற்று தமது அன்றாட வாழ்வை வலிகளோடு வாழ்ந்துகொண்டு இருக்கும் தாய் தந்தையின் கதை எம் மண்ணில் ஏராளம்.
அந்த வகையில் மண்ணின் விடுதலைக்காய் 3 பிள்ளைகளை பறி கொடுத்து விட்டு உடம்பிலே எடுக்க முடியாத நிலையில் உள்ள எறிகணை துண்டு பாகங்களுடன் வாழ்ந்து கொண்டு இருக்கும் மல்லாவி வங்கை நகரை சேர்ந்த முன்னாள் போராளியின் தாய் தந்தையான சண்முகசேகரம் கிருஸ்ணாம்பாள் என்பவர்களின் துயர் அறிந்து அவர்களை நோக்கி ஐபிசி தமிழன் உறவுப்பாலம் நிகழ்ச்சி பயணித்தது.
5 பிள்ளைகளில் மூவர் மாவீரர் என்றும் இளையவனுக்கு எடுக்கமுடியாத நிலையிலே நெஞ்சில் எறிகணை துண்டு இருப்பதாகவும் கூறி கண் கலங்கி கொண்டார் மூன்று மாவீரர்களின் வீரத்தாய்.
வேலை எதுவும் செய்ய முடியாத நிலையில் உடம்பிலே எறிகணை பாகங்கள் இருப்பதாகவும் அதனால் தான் படும் துயர் சொல்லில் அடங்காது எனவும் கூறி தந்தை சண்முகசேகரம் தனது துயரை உறவுப்பாலம் ஊடாக எம்மோடு பகிர்ந்து கொண்டார்.
அவர்கள் துயரில் இருந்து ஒரு படி மேல விரும்பினால் உங்களால் முடிந்த உதவிகளை செய்யுங்கள்.
எமக்காய் உயிர் தியாகம் செய்தவர்களை நாம் மறப்பது தகுமோ...
தொடர்புகளுக்கு +94212030600/ +94767776363
ஐபிசி தமிழன் உறவுப்பாலம் நிகழ்ச்சி..