சிறுவர்கள் தொலைபேசி பயன்படுத்தக் கூடாது : அமைச்சர் அறிவுறுத்தல்
Sri Lanka
Mobile Phones
Preschool Children
Saroja Savithri Paulraj
By Sathangani
நாட்டிலுள்ள ஆறு வயதுக்குட்பட்ட சிறுவர் மற்றும் சிறுமியர் கையடக்கத் தொலைபேசிகளைக் கையாளுவதற்குப் பெற்றோர் அனுமதிக்கக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
குறித்த விடயத்தினை மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் (Saroja Savithri Paulraj) வலியுறுத்தியுள்ளார்.
விஹாரமகா தேவி பூங்காவில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றின் போதே, அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
விளையாட்டில் அதிக கவனம்
அத்துடன் கையடக்கத் தொலைபேசி பயன்பாடு இளம் பராயத்தினர் மீது ஏற்படுத்தும் எதிர்மறையான தாக்கத்தை அவர் இதன்போது எடுத்துரைத்தார்.
மேலும், ஆரம்ப வயதுகளில் திரை செயற்பாட்டைவிட, கற்றல், சமூக தொடர்பு மற்றும் விளையாட்டில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்றும் அமைச்சர் கோரியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்