தென்னிலங்கையை உலுக்கிய 'பரிப்புவா' கைது!
Police
SriLanka
Galgamuwa
Paripuva
Ambanpola
By Chanakyan
போதைப்பொருள் வியாபாரம் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களுடன் தொடர்புடைய அமைப்பொன்றைச் சேர்ந்த 'பரிப்புவா' எனப்படும் நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கல்கமுவ - அம்பன்பொல பிரதேசத்தில் வைத்து இவர் காவல்துறையின் விசேட அதிரடிப்படை அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்படும் போது அவரிடமிருந்து கைக்குண்டு ஒன்று மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இவரிடம் மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
