நீண்ட நாட்களுக்கு பிறகு மோதவுள்ள மெஸ்ஸி மற்றும் ரொனால்டோ!
உலகக்கிண்ண கால்பந்தாட்ட போட்டிகள் நிறைவடைந்த நிலையில், புதிய வீரர்களை ஒப்பந்தம் செய்வதில் ஒவ்வொரு உதைபந்தாட்ட கழகங்களும் மும்முரமாக ஈடுபட்டுள்ளன.
அந்தவகையில், பாரிஸ் செயின்ட் ஜெர்மைனில் அணிக்கு மெஸ்ஸி ஒரு வருடத்திற்கும், சவுதி அரேபிய கிளப் அல் நஸ்ருக்கு ரொனால்டோ இரண்டரை வருடத்திற்கும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.
இந்த இரண்டு அணிகளும் மோதும் நட்பு ரீதியான போட்டி ஒன்று இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேருக்கு நேர் மோதல்
நட்சத்திர வீரர்களான மெஸ்ஸி மற்றும் ரொனால்டோ ஆகிய இருவரும் விளையாடும் கழகங்கள் மோதும் குறித்த போட்டியை ஆவலாய் எதிர்பார்த்து உதைபந்தாட்ட ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
நீண்ட காலத்திற்கு பிறகு இரு நட்சத்திரங்களும் நேருக்கு நேர் மோத உள்ளமை குறிப்பிடத்தக்கது.
குறித்த போட்டியானது எதிர்வரும் 19 ஆம் திகதி நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 2 நாட்கள் முன்
