கொரோனா தொற்று காரணமாக ஒத்தி வைக்கப்பட்ட நாடாளுமன்ற அமர்வு!
Corona
Parliament
SJB
Tissa aththanayaka
By Chanakyan
கொரோனா நிலைமை காரணமாக இந்த வார நாடாளுமன்ற கூட்டங்களை நிறுத்தி வைக்க எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன.
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மேலதிகமாக பல ஊழியர்கள் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளதால் இந்த நடவடிக்கை அவசியம் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க கோரிக்கைவிடுத்துள்ளார்.
இது பொதுமக்களுக்கு முன்னுதாரணமாக அமையும் என்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
ஆகஸ்ட் 17 ஆம் திகதி முதல் ஆகஸ்ட் 20 ஆம் திகதி வரை நான்கு நாட்கள் இவ்வாரத்துக்கான நாடாளுமன்றத்தைக் கூட்டுவதற்கும் கௌரவ சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்த்தன தலைமையில் நடைபெற்ற நாடாளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதாக செயலாளர் நாயகம் முன்னதாக கூறியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
1ம் ஆண்டு நினைவஞ்சலி