பஸில் ராஜபக்ஷவுக்காக நாடாளுமன்ற உறுப்புரிமையை விட்டுக்கொடுத்த ஜயந்த கெட்டகொட கப்ராலுக்காக மீள் பிரவேசம்?
நாடாளுமன்ற உறுப்பினராக மீண்டும் ஜயந்த கெட்டகொடவை நியமிப்பதற்கு பொதுஜன பெரமுன ஆலோசித்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அஜித் நிவாட் கப்ரால் தமது நாடாளுமன்ற உறுப்புரிமையில் இருந்து விலகுவதால் வெற்றிடமாகும் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்புரிமைக்கு, முன்னாள் நடாளுமன்ற உறுப்பினர் ஜயந்த கெட்டகொடவை நியமிப்பது தொடர்பிலேயே ஆலோசனை இடம்பெறுகின்றது.
பசில் ராஜபக்ஷ நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்க வாய்ப்பளித்து, ஜெயந்த கெட்டகொட தமது நாடாளுமன்ற உறுப்புரிமையில் இருந்து விலகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.
தற்போது மத்திய வங்கியின் ஆளுநராக இருக்கும் பேராசிரியர் டபிள்யு.டி.லக்ஷ்மன் இன்னும் இரண்டு தினங்களில் தமது பதவியிலிருந்து விலக உள்ளார்.
அதனையடுத்து மத்திய வங்கியின் ஆளுநராக அஜித் நிவாட் கப்ரால் மீள நியமிக்கப்பட்டுள்ளார். அந்தப் பதவிக்கான அதிகாரங்களை அதிகரிப்பது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.