விசித்திரமான பேச்சாளர்கள் தேவையில்லை : உதயங்க வீரதுங்கவிற்கு பதிலடி
ராஜபக்சாக்களின் கருத்துக்களை நாட்டுக்கு வெளிப்படுத்த விசித்திரமான பேச்சாளர்கள் தேவையில்லை என சிறி லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர், நாடாளுமன்ற உறுப்பினர் சாகர காரியவசம்(sagara kariyawasam) தெரிவித்துள்ளார்.
அடுத்த மாதம் பதினைந்தாம் திகதிக்கு முன்னர் நாடாளுமன்றம் கலைக்கப்படும் என உதயங்க வீரதுங்க(Udayanga Weeratunga) தெரிவித்த கருத்துக்கு பதிலளித்த அவர்,
முன்னாள் ரஷ்ய தூதுவர் என்ற ரீதியில்
முன்னாள் ரஷ்ய தூதுவர் என்ற ரீதியில் தான் இந்த கருத்தை அவர் வெளியிட்டிருக்க வேண்டும் என்றார்.
ஒருபோதும் கோரிக்கை விடுக்கவில்லை
நாடாளுமன்றத் தேர்தலை முதலில் நடத்துமாறு ஒரு கட்சி என்ற ரீதியில் அதிபரிடம் தாம் ஒருபோதும் கோரிக்கை விடுக்கவில்லை என்றும், நாடாளுமன்றத் தேர்தலை முதலில் நடத்துவதே பொருத்தமானது என்ற கருத்தையே தாம் சமர்ப்பித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
பொது ஜன பெரமுனவின் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
