காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட பட்டமளிப்பு விழாக்கள்
University of Kelaniya
University of Peradeniya
Strike Sri Lanka
By Sumithiran
பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் வேலை நிறுத்தம் காரணமாக பல பல்கலைக்கழகங்களின் பட்டமளிப்பு விழா காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
பேராதனை, களனி மற்றும் பல பல்கலைக்கழகங்களின் பட்டமளிப்பு விழாவிற்கு தேவையான நடவடிக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த போதிலும் கல்விசாரா ஊழியர்களின் வேலைநிறுத்தம் காரணமாக விழாவை நடத்த முடியாமல் போனதாக பேராதனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
பட்டப்படிப்பு சான்றிதழ்கள் கிடைப்பதில் காலதாமதம்
இதனால் பட்டமளிப்பு விழா காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட உள்ளதாகவும், பட்டதாரிகளுக்கு பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பதற்கு தேவையான பட்டப்படிப்பு சான்றிதழ்கள் கிடைப்பதில் காலதாமதம் ஏற்படும் என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கற்றல் செயற்பாடுகள் ஸ்தம்பிதம்
இதேவேளை, பல்கலைக்கழகங்களில் கற்றல் செயற்பாடுகள் ஏறக்குறைய ஸ்தம்பிதமடைந்துள்ளதாகவும் பல்கலைக்கழக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

10ம் ஆண்டு நினைவஞ்சலி