சிறிலங்கா நாடாளுமன்றத்தில் கடும் கொந்தளிப்பு - தமிழ் எம்.பிக்களுடன் வாதவிவாதம் - நேரலை
இன்றைய நாடாளுமன்ற அமர்வு (07) மு.ப. 09.30 மணிக்கு ஆரம்பமாகி நடைபெற்று வருகிறது.
மு.ப. 09.30 மணி முதல் பி.ப. 05.30 மணி வரை "சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சிகள் உட்பட இலங்கையின் கைத்தொழில் துறை எதிர்கொள்ளும் பிரச்சினைகள்" தொடர்பாக எதிர்க்கட்சியினால் கொண்டுவரப்படும் பிரேரணைக்கு அமைய ஒத்திவைப்பு விவாதம் நடைபெறவுள்ளது.
இதேவேளை, தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மீதான காவல்துறையின் நடவடிக்கை தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான இரா. சாணக்கியன் மற்றும் எஸ். சிறீதரன் ஆகியோர் சுட்டிக்காட்டிய போதே கடும் கொந்தளிப்பு ஏற்பட்டது.
அமைச்சர் மகிந்த அமரவீர உள்ளிட்ட சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் கஜேந்திரகுமாரின் கைது தொடர்பில் பொய்களைக் கூறுவதாகவும், அதனை தான் நிராகரிப்பதாகவும் சிறீதரன் தெரிவித்தார்.
நேரலை
