இன்று கூடவுள்ள நாடாளுமன்றம்: விடுக்கப்பட்டுள்ள அறிவித்தல்
அதிபர் பதவி வெற்றிடம்
நாடாளுமன்றம் இன்று (சனிக்கிழமை) சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடவுள்ளதாக நாடாளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க தெரிவித்தார்.
அரசியலமைப்பு சட்டத்தின்படி அதிபரை தெரிவு செய்வதற்கான விசேட ஏற்பாடுகளுக்காக மூன்று நாட்களுக்குள் நாடாளுமன்றம் கூட்டப்பட வேண்டும்.
மேலும் சிறிலங்காவின் அதிபர் பதவி வெற்றிடமாக இருப்பதாக நாடாளுமன்ற செயலாளர் நாயகம் இன்று நாடாளுமன்றத்தில் அறிவிக்கவுள்ளமை குறிப்பிடதக்கது.
இந்த நாட்டின் வரலாற்றில் நாடாளுமன்றத்தின் மூலம் சிறிலங்கா அதிபர் ஒருவர் தெரிவு செய்யப்படுகிறன்ற இரண்டாவது சந்தர்ப்பம் இதுவாகும்.
இதேவேளை நாடாளுமன்றத்துக்கு பிரவேசிக்கும் இரண்டு பிரதான நுழைவு வீதிகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன என்றும் இதன்காரணமாக வாகன சாரதிகள் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு போக்குவரத்து காவல்துறையினர் அறிவுறுத்தல் விடுத்துள்ளனர்.
