மே 9 வன்முறை! - தேடிப்பிடித்து கைது செய்யும் காவல்துறை
Police spokesman
Sri Lanka Police
Sri Lankan protests
Sri Lankan political crisis
Galle Face Riots
By Kanna
கடந்த மே மாதம் 9ஆம் திகதி ஏற்பட்ட அமைதியின்மையை தொடர்ந்து ஊரடங்கு உத்தரவை மீறியவர்கள், பொதுமக்களை தாக்கியவர்கள், பொது மற்றும் தனியார் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தவர்கள் போன்றோரை காவல்துறையினர் தேடிப்பிடித்து கைது செய்து வருகின்றனர்.
இதன்படி, கடந்த 9 திகதி முதல் இன்று வரை 230 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
கடந்த மே மாதம் 9ஆம் திகதி முதல் நாடு முழுவதும் 707 வன்முறைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, அவர்களில் 68 பேர் நீதிமன்றத்தால் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மே 9ஆம் திகதி காலி முகத்திடலில் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் தொடர்பில் 170 வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் மேலும் தெரிவித்தனர்.

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்