எம்.பிக்களின் ஓய்வூதியச் சலுகைகளுக்கு முற்றுபுள்ளி...! அநுர வைத்த செக்
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான ஓய்வூதியச் சலுகையை இரத்துச் செய்யும் முன்மொழிவின் இரண்டாம் வாசிப்பு, 152 மேலதிக வாக்குகளால் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
இந்தப் பிரேரணைக்கு ஆதரவாக 154 உறுப்பினர்கள் வாக்களித்த நிலையில், எதிராக இரண்டு வாக்குகள் மாத்திரமே அளிக்கப்பட்டன.
முக்கிய தீர்மானமாகப் பார்க்கப்படும் இந்த வாக்கெடுப்பில், எதிர்க்கட்சியைச் சேர்ந்த பெரும்பான்மையான உறுப்பினர்கள் கலந்துகொள்ளாமல் தவிர்த்துள்ளனர்.
நாடாளுமன்றத்தின் பெரும்பான்மை ஆதரவுடன் இந்த முன்மொழிவு நிறைவேற்றப்பட்டுள்ளதால், முன்னாள் மற்றும் தற்போதைய உறுப்பினர்களுக்கான ஓய்வூதியக் கொடுப்பனவு நிறுத்தப்படுவதற்கான சட்ட நடைமுறைகள் உறுதியாகியுள்ளன.
இந்தநிலையில், அரசியல்வாதிகளுக்கான விசேட சலுகைகளை நீக்கும் இந்த நடவடிக்கை, தற்போதைய அரசாங்கத்தின் நிதி மேலாண்மை மற்றும் நிர்வாகக் கொள்கையின் ஒரு முக்கிய கட்டமாகப் பார்க்கப்படுகிறது.
இது உட்பட அண்மைய அரசியல் நிலவரங்கள் குறித்து விரிவாக ஆராய்கின்றது லங்காசிறியின் நாட்டு நடப்பு நிகழ்ச்சி...
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
சிவபூமி எனப்படும் ஈழத்தின் முக்கிய விரதமான மகாசிவராத்திரி… 2 நாட்கள் முன்