இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முன்னிலையான நாடாளுமன்ற அதிகாரிகள்!
நாடாளுமன்றத்தைச் சேர்ந்த அதிகாரிகள் பலர் இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுக்களை விசாரணை செய்யும் ஆணைக்குழுவில் (CIABOC) முன்னிலையாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
முன்னாள் நாடாளுமன்ற பிரதி செயலாளர் நாயகம் சமிந்த குலரத்னவினால் முன்வைக்கப்பட்ட முறைப்பாடு தொடர்பில், விளக்கமளிப்பதற்காக குறித்த அதிகாரிகள் இன்று (03) அந்த ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளனர்.
அத்துடன், சமிந்த குலரத்னவின் முறைப்பாடு தொடர்பான விசாரணைக்கு தேவையான ஆவணங்களுடன் நாடாளுமன்ற அதிகாரிகள் ஆணைக்குழுவிற்கு சென்றுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
முன்னெடுக்கப்படும் விசாரணைகள்
இந்த விவகாரம் குறித்த இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுக்களை விசாரணை செய்யும் ஆணைக்குழு தனது விசாரணைகளை தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றது.

இதேவேளை சபாநாயகரால் வாகனங்களும் உத்தியோகபூர்வ இல்லங்களும் தவறாகப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படுவது தொடர்பாக, சமிந்த குலரத்ன மற்றும் பல தரப்பினரால் 2026 பெப்ரவரி 02 அன்று வழங்கப்பட்ட முறைப்பாட்டைத் தொடர்ந்து விசாரணைகள் தொடங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |