ஷிரான் பாசிக் தொடர்பான விசாரணை : அருந்திக பெர்னாண்டோவிடம் CCIB வாக்குமூலம்
முன்னாள் இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்னாண்டோவிடம் மத்திய குற்றப்புலனாய்வுப் பணியகத்தினர் தற்போது வாக்குமூலம் ஒன்றைப் பதிவு செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
பாரியளவிலான போதைப்பொருள் கடத்தல்காரர் எனக் கூறப்படும், அண்மையில் டுபாயிலிருந்து அழைத்து வரப்பட்ட ஷிரான் பாசிக் தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைகளுக்கு அமைவாகவே இவ்வாறு வாக்குமூலம் பதிவு செய்யப்படுவதாகக் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் அருந்திக பெர்னாண்டோவின் சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் தொடர்பிலும் இதன்போது வாக்குமூலம் பதிவு செய்யப்படவுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகம்
இதேவேளை சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் தெஹிவளை - கல்கிசை முன்னாள் மேயர் தனசிரி அமரதுங்கவிற்கு மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தில் (CCIB) முன்னிலையாகுமாறு கடந்த சில தினங்களுக்கு முன்னர் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

இந்தநிலையில் முன்னாள் மேயர் தனசிரி அமரதுங்க, கடந்த முதலாம் திகதி வாக்குமூலம் அளிப்பதற்காக மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தில் (CCIB) முன்னிலையாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |