கண்ணுக்குத் தெரியாத சக்தியால் இயக்கப்படும் நாடாளுமன்றம் - அம்பலப்படுத்திய பீரிஸ்
சிறிலங்கா நாடாளுமன்றம் இன்று நிறைவேற்று அதிகாரத்தின் கீழ் உள்ளது என்றும், நாடாளுமன்றம் சபாநாயகரால் நடத்தப்படவில்லை என்றும் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். அத்துடன் , கண்ணுக்குத் தெரியாத சக்தியால் நாடாளுமன்றம் நடத்தப்படுகிறது எனவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலை ஒத்திவைப்பது இலகுவான காரியம் அல்ல எனவும் தேர்தல்கள் ஆணைக்குழு தேர்தல் நடவடிக்கைகளை தொடர்வதாக உச்சநீதிமன்றில் உறுதிமொழி வழங்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
நீதிமன்ற அவமதிப்பு
யாரேனும் தேர்தலை ஒத்திவைக்க முயன்றால், அது நீதிமன்ற அவமதிப்பாகும் எனவும் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் குறிப்பிட்டுள்ளார்.
நீதித்துறை மற்றும் சர்வதேச ரீதியில் உள்ளாட்சித் தேர்தலை ஒத்திவைக்கும் எந்தவொரு நடவடிக்கைக்கும் எதிராக தம்மால் முடிந்த அனைத்தையும் செய்வோம் எனவும் அவர் சூளுரைத்துள்ளார்.
ஜனநாயக விரோத நடவடிக்கை
இந்த விடயத்தை சர்வதேச அளவிற்கு கொண்டுசெல்வோம் எனவும் இந்த
ஜனநாயக விரோத நடவடிக்கை குறித்து சர்வதேச சமூகத்திற்கு
தெளிவுபடுத்துவோம் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர்
பேராசிரியர் ஜி.எல்.பிரீஸ் மேலும் கூறியுள்ளார்.


கிழக்கில் தமிழர் இனவழிப்பு:காணாமல் போன அம்பாறை வயலூர் கிராமம் 15 மணி நேரம் முன்
