சற்று முன்னர் ஆரம்பமான நாடாளுமன்ற அமர்வுகள்
புதிய இணைப்பு
இன்றைய (07.10.2025) நாளுக்கான நாடாளுமன்ற அமர்வுகள் சபாநாயகர் தலைமையில் சற்றுமுன்னர் ஆரம்பமாகியுள்ளன.
முதலாம் இணைப்பு
ஒக்டோபர் மாதத்திற்கான முதல் நாடாளுமன்ற வாரம் இன்று (07) முதல் ஆரம்பமாகின்றது.
சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன (Jagath Wickramaratne) தலைமையில் இன்று காலை 9.30 மணிக்கு நாடாளுமன்றம் கூடவுள்ளதாக நாடாளுமன்ற செயலகம் அறிவித்துள்ளது.
இன்றைய நாடாளுமன்ற அமர்வின் போது காலை 09.30 முதல் 10.00 வரையான காலப்பகுதியில் நாடாளுமன்ற நிலையியற் கட்டளை 22(1) முதல் (6) வரையின் பிரகாரம் நாடாளுமன்ற அலுவல்கள் இடம்பெறவுள்ளது.
காலை 10.00 முதல் 11.00 மணிவரை வாய்மூல விடைக்கான வினாக்களுக்கான நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
அதேநேரம் காலை 11.00 முதல் 11.30 வரை நாடாளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் வினாக்களுக்கு நேரம் வழங்கப்பட்டுள்ளது.
பின்னர் காலை11.30 முதல் மாலை 5.00 மணி வரை விளையாட்டில் ஊக்கப் பதார்த்தப் பயன்பாட்டிற்கு எதிரான சமவாயம் (திருத்தச்) சட்டமூலம் தொடர்பான இரண்டாம் மதிப்பீட்டு விவாதம் இடம்பெறவுள்ளது.
நாடாளுமன்ற அமர்வின் இறுதியாக மாலை 5.00 முதல் 5.30 மணி வரையில் சபை ஒத்திவைப்பு வேளையின் போதான வினாக்களுக்கான நேரம் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
