இன்றைய நாடாளுமன்ற அமர்வு - நேரலை
Parliament of Sri Lanka
Sri Lanka Parliament
By Vanan
நாடாளுமன்ற அமர்வு இன்று (20) மு.ப. 09.30 மணிக்கு ஆரம்பமாகியுள்ளதுடன், மு.ப. 09.30 மணி முதல் மு.ப. 10.30 மணி வரை வாய்மூல விடைக்கான வினாக்களுக்காக நேரம் ஒதுக்கப்பட்டது.
அதனையடுத்து, மு.ப 10.30 மணி முதல் பி.ப 5.00 மணி வரை பாராளுமன்ற வரவுசெலவுத்திட்ட அலுவலக சட்டமூலம் இரண்டாம் மதிப்பீட்டுக்காக விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
அதன்பின்னர், பி.ப. 5.00 மணிக்கு பலப்பிட்டிய ஸ்ரீ ராஹுலாராம புராண விஹாரஸ்த்த சாமனேர ஆகல்ப சங்வர்தன பிக்ஷு கல்லூரி (கூட்டிணைத்தல்) சட்டமூலத்தின் இரண்டாம் மதிப்பீடு இடம்பெறவுள்ளது.
அதனையடுத்து, பி.ப. 5.00 மணி முதல் பி.ப. 5.30 மணி வரை ஆளும் கட்சியினால் கொண்டுவரப்படும் பிரேரணைக்கு அமைய சபை ஒத்திவைப்பு நேரத்தின் போதான விவாதம் நடைபெறும்.
நேரலை
