சிறிலங்கா நாடாளுமன்றில் வாக்கெடுப்பு இன்றி நிறைவேறிய சட்டமூலம்
இலங்கையில் நாடாளுமன்ற வரவு - செலவுத்திட்ட அலுவலகத்தை நிறுவுவது தொடர்பான சட்டமூலம் சிறிலங்கா நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்தச் சட்ட மூலம் இன்று விவாதிக்கப்பட்டு திருத்தங்களுடன் வாக்கெடுப்பு இன்றி நிறைவேற்றப்பட்டுள்ளது.
வாக்கெடுப்பு இன்றி நிறைவேற்றம்
இலங்கையில் நாடாளுமன்ற வரவு - செலவுத் திட்ட அலுவலகத்தை அமைப்பதற்கு பொது நிதி தொடர்பான குழு திருத்தத்துடன் அனுமதி வழங்கியிருந்தது.
நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ. டி சில்வா தலைமையில் அண்மையில் கூடிய அரசாங்க நிதி பற்றிய குழுக் கூட்டத்திலேயே இவ்வாறு அங்கீகாரம் வழங்கப்பட்டது.
இந்த நிலையில் நாடாளுமன்ற வரவு - செலவுத்திட்ட அலுவலகத்தை அமைப்பது குறித்த சட்டமூலத்தின் இரண்டாவது மதிப்பீட்டின் மீதான விவாதம் இன்று காலை முதல் மாலை வரை நடைபெற்றது.
அதனையடுத்தே சட்ட மூலம் திருத்தங்களுடன் வாக்கெடுப்பு இன்றி நிறைவேற்றப்பட்டுள்ளது.
