நாடாளுமன்ற தேர்தல் மேலும் தாமதம்: பெஃப்ரல் கரிசனை
நாடாளுமன்ற தேர்தல் முறையில் மாற்றங்களை மேற்கொள்வதற்கான முயற்சிகள் காரணமாக தேர்தல்கள் தாமதமாகலாமென தேர்தல் கண்காணிப்பு அமைப்பான பெஃப்ரல் கரிசனை வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக பெஃப்ரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரோகண ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், தேர்தல் முறையில் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ளார்.
நாடாளுமன்ற தேர்தல்
அதேவேளை, நாடாளுமன்ற தேர்தல் முறையில் மாற்றங்களை மேற்கொள்வதற்கு முன்னர் எல்லை நிர்ணய நடவடிக்கைகளை பூர்த்தி செய்யவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
எல்லை நிர்ணய நடவடிக்கைகளை பூர்த்தி செய்யாவிட்டாலும் ஒகஸ்ட் மாதத்திற்குள் தேர்தல் முறையில் மாற்றங்களை மேற்கொண்டாலும் இந்த நகல்சட்ட மூலத்தில் தற்போதுள்ள தேர்தல் முறையின் கீழ் தேர்தல்களை நடத்துவதற்கு தேர்தல் ஆணையகத்திற்கு அனுமதி வழங்கும் திருத்தத்தை உள்ளடக்கவேண்டும் என ரோகண ஹெட்டியாராச்சி குறிப்பிட்டுள்ளார்.
மேலும், எல்லையநிர்ணய நடவடிக்கைகளில் ஏற்பட்ட தாமதங்கள் காரணமாக முன்னர் உள்ளுராட்சி மற்றும் மாகாணசபை தேர்தல்கள் ஒத்திவைக்கப்பட்டதை ரோகண ஹெட்டியராச்சி சுட்டிக்காட்டியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |