அரசிலிருந்து விலகும் பங்காளி கட்சி? விரைவில் வரவுள்ள அறிவிப்பு
இன்று நாட்டு மக்கள் கொரோனா அச்சுறுத்தலை விட வாழ்க்கைச் சுமையினால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர் என நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண(Prof. Tissa Vitarana.) தெரிவித்துள்ளார்.
அந்த சுமையிலிருந்து மக்களை விடுவிக்க லங்கா சமசமாஜ கட்சி அரசாங்கத்திடம் வரவு செலவு திட்ட யோசனையை சமர்ப்பித்துள்ள போதிலும் அது எதுவும் வரவு செலவு திட்டத்தில் உள்ளடக்கப்படவில்லை என திஸ்ஸ விதாரண தெரிவித்துள்ளார்.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன அமைச்சரவையில் தமக்கு அமைச்சுப் பதவி வழங்கப்படும் என உறுதியளித்ததன் பிரகாரம் தாம் ஆளுநர் பதவியை இராஜினாமா செய்து மீண்டும் நாடாளுமன்றத்திற்கு திரும்பியதாகவும் எனினும் அமைச்சுப்பதவி வழங்கப்படவில்லை எனவும் திஸ்ஸ விதாரண தெரிவித்துள்ளார்.
எனவே எதிர்காலத்தில் அரசியல் தீர்மானம் ஒன்றை எடுக்க உள்ளதாகவும் திஸ்ஸ விதாரண தெரிவித்துள்ளார்.
தொற்றுநோய்கள் பற்றி தனக்கு நல்ல அறிவு இருப்பதாகவும், அன்று பெரியம்மை நோயை நாட்டிலிருந்து ஒழிக்க முடிந்தது என்றும், ஆனால் இன்று நாட்டை கொரோனா அச்சுறுத்தலில் இருந்து காப்பாற்ற அரசு தன்னிடம் இருந்து எந்த எந்தவித உதவியையும் கோரவில்லை என்றும் அவர் மேலும் கூறினார்.