தீர்மானம் எதுவுமின்றி நிறைவடைந்த கட்சித் தலைவர்கள் கூட்டம்
decision
parliament
party meeting
By Sumithiran
நாட்டின் தற்போதைய நிலைமை தொடர்பில் ஆராய்வதற்காக இன்று கூடிய கட்சித் தலைவர்கள் எவ்வித இறுதித்த தீர்மானத்திற்கும் வரவில்லை என நாடாளுமன்றத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, நாட்டின் தற்போதைய நிலைமை தொடர்பில் நாளையும் (6) நாளைமறுதினமும் (7) மேலதிக விவாதங்களை நடத்துவதற்கு நாடாளுமன்ற அலுவல்கள் குழு தீர்மானித்துள்ளது.
நாட்டின் தற்போதைய நிலைமை குறித்து நாளையும் நாளை மறுதினமும் கலந்துரையாடி இறுதித் தீர்மானத்தை எட்டுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அந்தத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாடாளுமன்ற அலுவல்கள் தொடர்பான குழு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இன்று (5) பிற்பகல் நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் கூடியது.
இந்த கூட்டத்தில் அரசு மற்றும் எதிர்க்கட்சி தலைவர்கள் பலர் கலந்து கொண்டனர்.

5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி