கிளப் வசந்தவின் இறுதி நாளில் பிரான்ஸில் கடலில் விருந்து வைத்து கொண்டாடிய கஞ்சி பானி
Sri Lanka
France
By Sumithiran
கிளப் வசந்தாவின் இறுதி ஊர்வலம் அன்று பிரபல பாதாள உலக குழு தலைவர் கஞ்சிப்பானி இம்ரான் பிரான்ஸில் கடலின் நடுவில் படகில் விருந்து வைத்து கொண்டாடியதாக கொழும்பு ஊடகமொன்று தெரிவித்துள்ளது.
இலங்கை நீதிமன்றத்தினால் பிணையில் விடுவிக்கப்பட்டு பிரான்ஸுக்கு தப்பிச் சென்று அந்நாட்டில் அரசியல் புகலிடம் கோரி தலைமறைவாகியுள்ளார் பாதாள உலகக் குழுத் தலைவர் கஞ்சிபானி இம்ரான்.
ஆழ் கடலில் பிறந்தநாள் கொண்டாட்டம்
இவ்வாறு தலைமறைவாகியுள்ள அவர் தனது பிறந்தநாளை ஆழ்கடலில் படகில் வைத்து கொண்டாடியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கிளப் வசந்தவின் இறுதிக் கிரியைகள்
இவர் தனது 38வது பிறந்தநாளை தனது நண்பர்களுடன் படகில் கேக் வெட்டி கொண்டாடினார்.

அவர் தலைமையில் நடத்தப்பட்ட தாக்குதலில் உயிரிழந்ததாக கூறப்படும் கிளப் வசந்தவின் இறுதிக் கிரியைகள் இடம்பெற்ற அதே தினத்தில் இந்த பிறந்தநாள் விழாவும் இடம்பெற்றமை விசேட அம்சமாகும்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்