“தொப்பி பிரட்டிகள்” என்ற அவப்பெயர் எதற்கு? ஹக்கீம் மற்றும் ரிசாட்டிடம் இம்ரான் மஹ்ரூப் கேள்வி

Colombo People SJB Imran Maharoof SriLanka Muslim people Marjan Balil
By Chanakyan Dec 14, 2021 05:47 AM GMT
Report

அப்போது கசப்பாக இருந்த மொட்டுக் கட்சியும், ராஜபக்ஸ குடும்பமும் இப்போது இனிப்பதற்கு காரணம் என்ன என்பதை சகல மக்களுக்கும் இவர்கள் தெளிவு படுத்த வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் (Imran Maharoof) அரசாங்கத்திற்கு அதரவு கொடுத்த முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இவர்கள் அங்கொன்றும், இங்கொன்றும் பேசுவதால் தான் இந்நாட்டு முஸ்லிம்கள் பெரும் அவமானங்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர். நம்பிக்கைக்கு துரோகம் செய்பவர்கள், தொப்பி பிரட்டிகள் என்றெல்லாம் முஸ்லிம் சமுகம் அவப்பெயரை சம்பாதித்துள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கொழும்பு - எதுல்கோட்டையில் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தினை  கோரியுள்ளார்.

தொடர்ந்தும் அவர் கருத்து வெளியிடுகையில், 

பல்லின சமூகம் வாழும் இந்நாட்டில் முஸ்லிம் சமுகத்தின் மீது மாற்று மத சகோதரர்கள் தப்பெண்ணம் கொள்ளும் வகையில் செயற்பட்டு சமுகத்தைக் காட்டிக் கொடுக்கும் வேலையை முஸ்லிம் காங்கிரசும் அகில இலங்கை மக்கள் காங்கிரசும் கைவிட வேண்டும்.

முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிசாட் பதியுதீன் ஆகியோரின் விருப்பத்துடன் தான் அக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் 20ஆவது திருத்தத்திற்கு ஆதரவாக வாக்களித்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் மர்ஜான் பளீல் தெரிவிக்கும் காணொளி சமுக வலைத்தளங்களில் தற்போது பரவலாகி வருகின்றது.

இக்கட்சிகளோடு நடந்த பேச்சுவார்த்தைகளில் தானும் ஈடுபட்டதால் அல்லாஹ் மீது ஆணையாக இதனை உறுதிப் படுத்துவதாக 20இற்கு ஆதரவாக வாக்களித்த நாடாளுமன்ற உறுப்பினர்களும் மற்றும் பலரும் கலந்து கொண்ட கூட்டத்தில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் தமது நாடாளுமன்ற உறுப்பினர்கள் 20இற்கு ஆதரவாக வாக்களித்ததற்கும் தங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று சொல்லி வருகின்றனர்.

இவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவிக்கின்றனர். 20இற்கு ஆதரவாக வாக்களித்த தங்களது நாடாளுமன்ற உறுப்பினர்களை கட்சியிலிருந்து விலக்கியுள்ளோம். கட்சியில் வகித்த பதவிகளில் இருந்து அவர்களை விலக்கியுள்ளோம் என்று ஊடகங்களில் அறிக்கை விட்டதைத் தவிர இக்கட்சிகள் இவர்களுக்கெதிராக வேறு என்ன நடவடிக்கை எடுத்துள்ளன என்று கேட்க விரும்புகின்றேன்.

தலைவர்களுக்கும், தங்களது நாடாளுமன்ற உறுப்பினர்கள் 20இற்கு ஆதரவாக வாக்களித்தற்கும் தொடர்பு இல்லை என்றால் இதுவரை இந்த எம்.பிக்களுக்கெதிரான மேலதிக நடவடிக்கைக்கு இக்கட்சிகள் வந்திருக்கும்.

தலைவர்களது அனுசரணையோடு எம்.பிக்கள் செயற்பட்டதால் தான் அவர்களால் வெறும் ஊடக அறிக்கையோடு மக்களை ஏமாற்றும் செயற்பாடுகளை இக்கட்சிகள் முன்னெடுத்து வருகின்றன.

இதில் இன்னொரு வேடிக்கை என்னவென்றால் 20இற்கு ஆதரவாக வாக்களித்த தங்களது நாடாளுமன்ற உறுப்பினரை மன்னித்து விட்டதாக முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் கூறி அப்படியானவர்களுக்கு கட்சியில் உயர் பதவிகள் வழங்குவது தான். நாடாளுமன்ற உறுப்பினர்  மர்ஜான் பளீல் எம்.பி கூறுவதையும், இக்கட்சிகளின் செயற்பாடுகளையும் சிந்தித்துப் பார்க்கின்ற போது இந்தத் தலைவர்கள் சமுகத்தை ஏமாற்றி வருகின்றார்கள் என்பதை தெளிவாக உணர்ந்து கொள்ள முடிகின்றது.

இவர்கள் அங்கொன்றும், இங்கொன்றும் பேசுவதால் தான் இந்நாட்டு முஸ்லிம்கள் பெரும் அவமானங்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர். நம்பிக்கைக்கு துரோகம் செய்பவர்கள், தொப்பி பிரட்டிகள் என்றெல்லாம் முஸ்லிம் சமுகம் அவப்பெயரை சம்பாதித்துள்ளது.

முஸ்லிம்கள் நம்பிக்கைக்குரியவர்கள் அல்ல. அற்ப இலாபங்களுக்காக இடம் மாறுவார்கள். அவர்கள் கொள்கையற்ற சமுகம் என்றெல்லாம் மாற்று மத சகோதரர்கள் முஸ்லிம் சமுகத்தைப் பற்றி எடை போட இக்கட்சிகளே காரணமாக இருக்கின்றன.

அது மட்டுமல்லாது இன்று இந்நாட்டில் பெரும்பான்மை சமுகத்தினர் முஸ்லிம் சமுகத்தின் மீது தப்பான எண்ணம் கொள்வதற்கும் விரோதமான கருத்துக்களை வெளியிடுவதற்கும் இந்த முஸ்லிம் கட்சிகளின் செயற்பாடுகள் தான் காரணமாக அமைந்துள்ளன.

தங்களது சுயநலத்துக்காக சமுகத்திற்கு அவப்பெயரை உருவாக்குவதை இந்த முஸ்லிம் கட்சிகள் முதலில் கைவிட வேண்டும். தேர்தல் மேடைகளில் ராஜபக்ஸ குடும்பத்திற்கும், மொட்டுக்கட்சிக்கும் திட்டித்தீர்த்து தான் இக்கட்சிகள் ஆசனங்களைப் பெற்றன.

அப்போது கசப்பாக இருந்த மொட்டுக் கட்சியும், ராஜபக்ஸ குடும்பமும் இப்போது இனிப்பதற்கு காரணம் என்ன என்பதை சகல மக்களுக்கும் இவர்கள் தெளிவு படுத்த வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். 

ReeCha
14ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை வடக்கு, மாவிட்டபுரம்

31 Dec, 2023
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், Toronto, Canada

03 Jan, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாவிட்டபுரம், அளவெட்டி, வட்டக்கச்சி

20 Dec, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, புங்குடுதீவு, Scarborough, Canada

07 Dec, 2024
மரண அறிவித்தல்

கொம்மந்தறை, London, United Kingdom

29 Dec, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Klang, Malaysia, யாழ்ப்பாணம், கலிஃபோர்னியா, United States

08 Jan, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, கொழும்பு, Scarborough, Canada

05 Jan, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மிருசுவில், தமிழ்நாடு, India, பரிஸ், France, Neuss, Germany

06 Jan, 2023
12ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை மேற்கு, கனடா, Canada, ஜேர்மனி, Germany

18 Dec, 2012
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பொன், London, United Kingdom

06 Dec, 2024
மரண அறிவித்தல்

கரவெட்டி மேற்கு, London, United Kingdom

05 Jan, 2025
மரண அறிவித்தல்

நல்லூர், Scarborough, Canada

04 Jan, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புத்தூர், Scarborough, Canada

03 Dec, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, ஸ்கந்தபுரம்

04 Jan, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Brampton, Canada

04 Jan, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், பம்பலப்பிட்டி

08 Dec, 2024
மரண அறிவித்தல்

வவுனியா, கொழும்பு, Ajax, Canada

02 Jan, 2025
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Drancy, France

30 Dec, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, செங்காளன், Switzerland

27 Dec, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், கொழும்பு, கனடா, Canada

26 Dec, 2014
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, வதிரி, California, United States

02 Jan, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, ஸ்கந்தபுரம்

04 Jan, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், சுவிஸ், Switzerland

25 Dec, 2014
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கோப்பாய் தெற்கு, Ermont, France

28 Dec, 2024
மரண அறிவித்தல்

துன்னாலை, Toronto, Canada

29 Dec, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், மடிப்பாக்கம், India

01 Jan, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரந்தன், காங்கேசன்துறை, பேர்ண், Switzerland

30 Dec, 2024
மரண அறிவித்தல்

தாவடி, கொழும்பு, Birmingham, United Kingdom

23 Dec, 2024
மரண அறிவித்தல்

வேலணை 5ம் வட்டாரம், Champigny-Sur-Marne, France

26 Dec, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Mississauga, Canada

31 Dec, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, கரம்பொன் மேற்கு, ஊர்காவற்துறை, பேர்லின், Germany

05 Jan, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 6 ஆம் வட்டாரம், கொக்குவில்

01 Jan, 2020