வெளிநாடொன்றில் கோர விபத்து : 21 பேர் பலி - பலர் படுகாயம்
ஆப்கானிஸ்தானின் ஹெல்மண்ட் மாகாணத்தின் கெராஸ்க் மாவட்டத்தில் பேருந்து ஒன்று எண்ணெய் தாங்கி வாகனம் ஒன்றுடன் மோதியதில் சுமார் 21 பேர் உயிரிழந்துள்ளனர்.
அதேவேளை, இந்த விபத்தினால் 38 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
மூன்று வாகனங்கள்
குறித்த விபத்தானது, கந்தஹார்-ஹேராத் நெடுஞ்சாலையில் இன்று(17) இடம்பெற்றுள்ளது.
ஹெராத் நகரிலிருந்து தலைநகர் காபூலுக்குப் பயணித்த உந்துருளி, எரிபொருள் வாகனம் மற்றும் பேருந்து ஆகியவை ஒன்றுடன் ஒன்று மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
11 பேர் பலத்த காயம்
அதன்போது, உந்துருளி மீது மோதிய பின்னர் பேருந்தின் சாரதி கட்டுப்பாட்டை இழந்து எதிர்திசையில் பயணித்த எண்ணெய் வாகனம் மீது மோதியுள்ளார் இதன்போது தீ பரவலும் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், காயமடைந்த 38 பேரில் 11 பேர் பலத்த காயங்களுடன் மருத்துவமனைகளுக்கு மாற்றப்பட்டதாக ஹெல்மண்ட் மாநில காவல்துறை தலைமைப் பேச்சாளர் ஹசதுல்லா ஹக்கானி தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |