ஆபத்தான பயணத்தில் அரச பேருந்து :அச்சத்தில் பயணிகள்
Sri Lanka Police
Jaffna
Srilanka Bus
By Sumithiran
இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்று இன்றைய தினம்(04)முகமாலை மற்றும் கொடிகாம பகுதியில் அதிகளவான பயணிகளை ஏற்றிக்கொண்டு அபாயமான பயணத்தை மேற்கொண்டதாக பயணிகள் அச்சத்துடன் தெரிவித்தனர்.
பேருந்தொன்றில் குறிப்பிட்ட பயணிகளை ஏற்றும் நிலையை கடந்து தற்போது அதிகளவான பயணிகளை ஏற்றிச் செல்லும் வழமை காணப்பட்டு வருகிறது
சேவை நோக்கை விடுத்து இலாப நோக்கம்
குறிப்பாக அரச பேருந்துகள் சேவை நோக்கில் தமது பணியினை செய்வதனை முழுமையாக விட்டு விட்டு இலாப நோக்குடன் செயற்படுவதால் தற்போது பயணிகள் இவ்வாறன பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டு வருகிறது

இவ்வாறான செயற்பாடுகளால் தான் பாரியளவு விபத்துக்கள் ஏற்படுகிறது இதனை கவனத்தில் கொண்டு இதற்கான நடவடிக்கைகளை காவல்துறையினர் உடனடியாக எடுக்க வேண்டும் என பயணிகள் மேலும் தெரிவித்தனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
ஈழ நிலம் உள்ளவரை நித்தியப்புன்னகை அழகனின் குரல் தீராது! 2 நாட்கள் முன்
ஜே.வி.பி.யின் அடுத்த தலைவராக பிமலை வளர்க்கிறதா சீனா …!
6 நாட்கள் முன்
மரண அறிவித்தல்
12ம் ஆண்டு நினைவஞ்சலி