மீண்டும் கடவுச்சீட்டு விநியோகத்தில் நெருக்கடி... வெளியான தகவல்
குடிவரவு திணைக்களம் (Department of Immigration) பத்து இலட்சம் சாதாரண கடவுச்சீட்டுகளை மீள் கொள்வனவு செய்வதற்கான விலை மனுக்கோரல்களை விடுக்க தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தற்போது இலத்திரனியல் கடவுச்சீட்டுகளை பெறுவதற்கான விலை மனுக்கோரலுக்கமைய, 7.5 இலட்சம் சாதாரண கடவுச்சீட்டுகள் பெறப்பட்டுள்ளன.
இலத்திரனியல் கடவுச்சீட்டு கிடைக்கும் வரை சாதாரண கடவுச்சீட்டுகளின் அளவு போதுமானதாக இருக்காது என கருதி இந்த கடவுச்சீட்டுகளை பெறுவதற்கு விலைமனு கோரப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
விலைமனுக் கோரல்
எனினும் விலைமனுக் கோரலுக்கான அமைச்சரவை அங்கீகாரம் இன்னும் கிடைக்கப்பெறவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை கடவுச்சீட்டு வழங்கும் ஒப்பந்தத்தை பெற்ற நிறுவனங்கள் ஒக்டோபர் இரண்டாம் வாரத்தில் 750,000 வெற்று கடவுச்சீட்டுகளை வழங்குவதாக உறுதியளித்த போதிலும் 52,000 கடவுச்சீட்டுகளே வழங்கப்பட்டுள்ளதாக கடந்த சில நாட்களுக்கு முன்னர் குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
இந்தநிலையில், மீண்டும் எத்தனை கடவுச்சீட்டுகள் வழங்கப்படும் என்பது குறித்த தகவல்களை மேற்படி நிறுவனம் குடிவரவு திணைக்களத்திற்கு வழங்கவில்லை எனவும் சுட்டிக்காட்டப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |