வழமைக்கு திரும்பும் கடவுச்சீட்டு விநியோகம்..! வெளியான அறிவித்தல்
Sri Lanka visa
Passport
Tourist Visa
By pavan
கடவுச்சீட்டு விநியோக நடவடிக்கை நாளை (09) முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் அறிவித்துள்ளது.
அதற்கமைய, பத்தரமுல்லையில் உள்ள குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் பிரதான அலுவலகத்திலும் மற்றும் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பிராந்திய காரியாலயங்களிலும் கடவுச்சீட்டு விநியோகம் வழமைக்கு திரும்பவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடவுச்சீட்டு விநியோகம்

கணனி முறைமைக் கோளாறு தற்போது சீரமைக்கப்பட்டுள்ளதன் காரணமாக கடவுச்சீட்டு விநியோகம் நாளை (09) முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், குடிவரவு - குடியகல்வு திணைக்களத்தில் கணினி கட்டமைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறுகளால் அதன் சேவைகள் இடைநிறுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
3ம் ஆண்டு நினைவஞ்சலி