கைதான ஜெரோம் பெர்னாண்டோவுக்கு விளக்கமறியல்! (புதிய இணைப்பு)
புதிய இணைப்பு
குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட ஆயர் ஜெரோம் பெர்னாண்டோ விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
எதிர்வரும் 13ஆம் திகதி வரை இவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
முதலாம் இணைப்பு
போதகர் ஜெரோம் பெர்னாண்டோ வாக்குமூலமொன்றை வழங்குவதற்காக குற்றப் புலனாய்வுப் பிரிவிற்கு வருகை தந்த போது குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டதாக அவரது சட்டத்தரணிகள் தெரிவிக்கின்றனர்.
இலங்கையில் மதச்சுதந்திரத்தை பாதிக்கும் வகையில் கருத்துக்களை வெளியிட்டமைக்காக அவரை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்த நிலையில் அவர் நாட்டை விட்டு வெளியேறியிருந்தார்.
இரண்டாம் நாள் வாக்குமூலம்
இந்தநிலையில், ஜெரோம் பெர்னாண்டோ, நாடு திரும்பியதும் கைது செய்யப்பட வேண்டுமென்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்த நிலையில் உத்தரவை மேன்முறையீட்டு நீதிமன்றம் மீள பெற்றிருந்தது.
மேலும், அவர் இலங்கைக்கு திரும்பிய 48 மணித்தியாலங்களில் சிறிலங்கா குற்றப்புலனாய்வு பிரிவில் வாக்குமூலம் வழங்க வேண்டுமெனவும் மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அந்தவகையில் போதகர் ஜெரோம் பெர்னாண்டோ நேற்று (30) குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார்.
இதனை தொடர்ந்து அவர் இன்றும் வாக்குமூலம் பதிவு செய்ய திணைக்களத்தில் முன்னிலையாகிய நிலையில் கைது செய்யப்பட்டதாக அவரது சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள் |
அன்னை பூபதி! ஈழ நிலத்தின் அன்னையர்களின் குறியீடு
5 நாட்கள் முன்