அடக்குமுறைக்குத் தயாராகாதீர் - அரசாங்கத்திற்கு நாமல் விடுத்த எச்சரிக்கை
அரசாங்கம் இனிமேல் அடக்குமுறைக்குத் தயாராகக் கூடாது என்றும், தங்களது பொறுமைக்கும் ஓர் எல்லை உண்டு என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச (Namal Rajapaksa) எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அளுத்கமவில் இன்று (23.08.2025) நடைபெற்ற நிகழ்வொன்றில் பங்கேற்று ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இந்த நேரத்தில் அரசாங்கத்தின் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளை மறைக்க அரசியல் கைதுகள் மேற்கொள்ளப்படுவதாக நாமல் ராஜபக்ச குற்றஞ்சாட்டினார்.
நாட்டின் பிரச்சினைகள்
ஒரு அரச தலைவரை கைது செய்வதன் மூலம் நாட்டின் பிரச்சினைகள் தீர்க்கப்படாது என்றும், ஜேவிபி தலைவர்கள் பாதுகாக்க ஒரு தலைமுறையோ அல்லது பாதுகாக்க ஒரு நாடோ இல்லை என்றும், தங்களுக்கு பாதுகாக்க ஒரு தலைமுறையும், பாதுகாக்க ஒரு நாடும் இருப்பதாகவும் நாமல் ராஜபக்ச இதன்போது குறிப்பிட்டுள்ளார்.
மேலும், அரசாங்கம் இனிமேல் அடக்குமுறைக்குத் தயாராகக் கூடாது என்றும், தங்களது பொறுமைக்கும் ஓர் எல்லை உண்டு என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நல்லாட்சி அரசாங்கத்தில் எங்களை அரசியல் பழிவாங்கலுக்கு ஆளாக்கியவர்கள் இன்று அரசியல் பழிவாங்கலுக்கு ஆளாகின்றனர் எனவும் அவர் குறிப்பிட்டார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


ஜனாதிபதிகளின் சிறப்புரிமை முடிவை ஆரம்பித்துவைத்த ரணிலின் கைது 12 மணி நேரம் முன்

ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா?
5 நாட்கள் முன்