நெடுந்தீவிலிருந்து உலங்கு வானூர்தியில் அழைத்து வரப்பட்ட நோயாளர்கள்
                                    
                    Jaffna
                
                                                
                    Jaffna Teaching Hospital
                
                                                
                    Sri Lanka Air Force
                
                                                
                    Floods In Sri Lanka
                
                        
        
            
                
                By Sumithiran
            
            
                
                
            
        
    யாழ்.மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையை அடுத்து குறிகாட்டுவான் நெடுந்தீவு(delft) கடற்போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.
இந்த நிலையில் நெடுந்தீவு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற 03 நோயாளர்களுக்கு மேலதிக சிகிச்சையளிக்கும் வகையில் விமானப்படையின்(sri lanka airforce) உலங்கு வானூர்தி மூலம் யாழ் போதனா வைத்தியசாலைக்கு இன்றையதினம் (நவம்பர் 28) அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.
பலாலிக்கு கொண்டு வரப்பட்டு யாழ்.போதனாவில் அனுமதி
நெடுந்தீவு வைத்தியசாலையின் ஏற்பாட்டில் நெடுந்தீவில் இருந்து 03 நோயாளரும் அவர்களது 3 உதவியாளர்களும் உலங்கு வானூர்தி மூலம் பலாலி விமான நிலையம் கொண்டு செல்லப்பட்டு தரைவழியாக கொண்டு சென்று யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

    
                                
            12ம் ஆண்டு நினைவஞ்சலி
        
        
            1ம் ஆண்டு நினைவஞ்சலி
        
        
            மரண அறிவித்தல்