உழவுக்கு உறுதுணையாக விளங்கும் ஆவினத்துக்கு நன்றி கூறும் திருநாள்!
தைத் திருநாளின் 2ஆம் நாளான இன்று உழவுத் தொழிலுக்கு உறுதுணையாக விளங்கும் கால்நடைகளுக்கு நன்றி கூறும் விதமாக மாட்டுப் பொங்கல் அல்லது பட்டிப் பொங்கல் நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.
உழவுத் தொழிலுக்கு உதவிய மாடுகளுக்கு நன்றி செலுத்தும் விதமாக தை இரண்டாம் நாள் மாட்டுப் பொங்கல் கொண்டாடப்படுகிறது. இந்நாளன்று மாடுகள் குளிப்பாட்டப்பட்டு சந்தனம், குங்குமம் இட்டு மாலைகள் மற்றும் சலங்கைகள் கொண்டு அலங்கரித்து விவசாயிகள் அதனை கடவுளாக வழிபடுவர்.
சர்க்கரை மற்றும் வெண் பொங்கல் செய்யப்பட்டு அவற்றுடன் செங்கரும்பு, பழவகைகள் ஆகியவை மாடுகளுக்கு படையலிடப்பட்டு வழிபாடு நடத்தி பின் வழிபாட்டுப் பொருட்கள் மாடுகளுக்கு உணவாக வழங்கப்படுகின்றன.
அன்றைய தினம் ஜல்லிக்கட்டு, உறி அடித்தல், வழுக்கு மரம் ஏறுதல் உள்ளிட்ட விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படுகின்றன.
மனிதர்களுடைய வாழ்வில் பல வழிகளிலும் ஒரு தாயினை போலவே பால், தயிர், மோர், நெய் என்று பலவற்றை தந்து மனித குலத்தையே காப்பதனால் பசுக்கள் புண்ணியம் நிறைந்த செல்வங்களாக உள்ளது.
மாடுகளை வைத்தே முன்பு செல்வங்கள் அளவிடப்பட்டது. இதன் மூலமாக மாடுகளுக்கான மகத்துவத்தை நாம் உணர்ந்து கொள்ள முடியும். ஒரு பசுவானது வாழ்வனைத்தும் மனிதர்களை பாதுகாக்கின்றது பலருக்கும் வாழ்வளிக்கின்றது.அத்தகைய கால்நடைகளை மனிதத்தோடு அரவணைப்போம்.
மேலும் பட்டிப்பொங்கல் தொடர்பான விரிவான விடயங்கள் கீழ் உள்ள இணைப்பில் காண்க...
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |