கோட்டாபயவின் அறிவிப்பு ஏமாற்று நாடகமே! தலையிடுவாரா மோடி?

sri lanka people mahinda rajapaksha pala nedumaran
By Shalini Sep 22, 2021 01:48 PM GMT
Report

கடந்த காலத்தில் மஹிந்த ராஜபக்ஸவும், கோட்டாபய ராஜபக்ஸவும் எவ்வாறு நடந்துகொண்டார்கள் என்பதை எண்ணிப் பார்த்தால், இப்போது கொடுத்துள்ள வாக்குறுதியும் காற்றில் பறக்கவிடப்படும் என தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ. நெடுமாறன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள அவர்,

ஐ.நா பேரவைக் கூட்டத்தில் பல்வேறு நாட்டு அதிபர்களும், தலைமை அமைச்சர்களும் பங்கேற்கிறார்கள். இக்கூட்டத்தில் கலந்துகொள்ள சென்றுள்ள சிறிலங்கா அதிபர் கோட்டாபய ராஜபக்ஸ “விடுதலைப்புலிகளுடன் தொடர்பு கொண்டதற்காக நீண்டகாலமாகச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளவர்களுக்குப் பொது மன்னிப்பு அளிப்பதில் தனக்கு தயக்கம் இல்லை” என்று ஐ.நா. செயலாளர் நாயகத்திடம் உறுதி அளித்திருப்பதாகச் செய்திகள் வெளியாகி உள்ளன.

ஆனால், கடந்த காலத்தில் மஹிந்த ராஜபக்ஸவும், அப்போதைய பாதுகாப்பு செயலாளராக இருந்த கோட்டாபய ராஜபக்ஸவும் எவ்வாறு நடந்துகொண்டார்கள் என்பதை எண்ணிப் பார்த்தால் இந்த வாக்குறுதியும் காற்றில் பறக்கவிடப்படும் என்பதில் ஐயமில்லை.

2009இல் போர் முடிந்த மறு ஆண்டான 2010இல் இலங்கையில் நடைபெற்ற போர்க் குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் குறித்து ஐ.நா. விசாரணை ஆணையம் அமைக்கப்படுவதாக அப்போதைய செயலாளர் நாயகம் பான்-கி-மூன் அறிவித்தார்.

ஆனால், இந்த விசாரணைக் குழுவை இலங்கைக்குள் அனுமதிக்க மஹிந்த ராஜபக்ஸ பிடிவாதமாக மறுத்துவிட்டார்.

2012ஆம் ஆண்டில் இலங்கையில் நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்து ஐ.நா. மனித உரிமை ஆணையம் அளித்தப் பரிந்துரைகளை நிறைவேற்றுவதற்கு இலங்கை அரசு மறுத்துவிட்டது.

2013ஆம் ஆண்டில் ஐ.நா. மனித உரிமை ஆணையர் நவநீதம்பிள்ளை இலங்கைக்கு நேரில் சென்று விசாரணை நடத்த முற்பட்ட போது, அவருக்கு ஒத்துழைப்புக் கொடுக்க தலைமையமைச்சர் மஹிந்த ராஜபக்ஸ மறுத்து புறக்கணித்தார்.

ஆனாலும், மனித உரிமை ஆணையர் இலங்கைத் தமிழ்ப் பகுதிகளில் சுற்றுப்பயணம் செய்து நேரடியாகப் பல உண்மைகளைக் கண்டறிந்து அறிக்கை அளித்தார்.

அதில் குறிப்பாக, எத்தகைய விசாரணையுமின்றி சிறையில் அடைக்கப்பட்டுள்ளவர்களை விடுதலை செய்யவேண்டும் என வற்புறுத்தியிருந்தார்.

அவரது அறிக்கையை முழுவதுமாக மஹிந்த ராஜபக்ஸ அரசு ஏற்க மறுத்துவிட்டது. 2014ஆம் ஆண்டில் இலங்கை அரசின் போர் மீறல்கள் குறித்து சர்வதேச புலன்விசாரணை நடத்துவதற்கு ஐ.நா. மனித உரிமை ஆணையம் முடிவு செய்தது.

ஆனால், இந்த விசாரணைக் குழுவைத் தனது நாட்டிற்குள் அனுமதிக்கவே ராஜபக்ஸ அரசு மறுத்துவிட்டது.

மீண்டும் 2019ஆம் ஆண்டு  ராஜபக்ஸ சகோதரர்கள் பதவிக்கு வந்த பிறகு “இலங்கை இறுதிக்கட்டப் போரின்ல் சிங்கள இராணுவம் மனித உரிமை மீறலில் ஈடுபட்டதற்கான 1.2இலட்சம் ஆதாரங்கள் தங்களிடம் இருப்பதாக ஐ.நா. மனித உரிமை ஆணையம்” கடந்த வாரத்தில் அறிவித்தது.

ஆனாலும், ஐ.நா.வையோ, ஐ.நா. மனித உரிமை ஆணையத்தையோ, அவற்றின் ஆணைகள் எதையுமே சிறிதளவுகூட மதிக்காத  ராஜபக்ஸச கோதரர்கள் இனிமேலும் மதிப்பார்கள் என்பதை உலகம் நம்பவில்லை.

ஐ.நா. பேரவைக் கூட்டத்தில் தான் பேசும்போது பிரச்சினை எதுவும் எழுந்துவிடக்கூடாது என்பதற்காக கோட்டாபய ராஜபக்ஸ மிகத் தந்திரமான அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்.

நாட்டிற்கு அவர் திரும்பிச் சென்ற பிறகு சிறையில் வாடும் தமிழர்களை விடுவிப்பார் என்பதற்கு எத்தகைய உத்தரவாதமும் இல்லை.

எனவே, ஐ.நா. பேரவைக் கூட்டத்தில் கலந்துகொள்ளச் சென்றுள்ள இந்திய பிரதமர் மோடி , சிறிலங்கா அதிபரிடம் ஐ.நா. மனித உரிமை ஆணையத்தின் பரிந்துரைகளை நிறைவேற்றுமாறு வலியுறுத்தவேண்டும் என வேண்டிக்கொள்கிறேன். என்றார்.

ReeCha
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

13 Sep, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில், Wembley, United Kingdom

13 Sep, 2025
மரண அறிவித்தல்

திருநெல்வேலி கிழக்கு, Paris, France

10 Sep, 2025
மரண அறிவித்தல்

மதவுவைத்தகுளம், பாவற்குளம், கரம்பைமடு

16 Sep, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
25ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

17 Sep, 2000
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மானிப்பாய், தண்ணீரூற்று, St. Gallen, Switzerland

18 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Toronto, Canada

28 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மட்டுவில், Vaughan, Canada

19 Aug, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வடலியடைப்பு, Toronto, Canada

14 Sep, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, Kokuvil, Scarborough, Canada

16 Sep, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய், Montreal, Canada

12 Sep, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Ikast, Denmark, Toronto, Canada

17 Sep, 2021
மரண அறிவித்தல்

வசாவிளான், Jaffna, Scarborough, Canada

13 Sep, 2025
35ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

செட்டிக்குளம், Vitry-sur-Seine, France

13 Sep, 2025
மரண அறிவித்தல்

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, பத்தமேனி, Wuppertal, Germany

16 Sep, 2024
நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 6ம் வட்டாரம், Mississauga, Canada

12 Sep, 2024
14ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சொலோதென், Switzerland

13 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில், Muscat, Oman, தாவடி, கொழும்பு, Melbourne, Australia

12 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Lampertheim, Germany

12 Sep, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி, Bushey, United Kingdom

13 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், Aubervilliers, France

04 Sep, 2025
மரண அறிவித்தல்

மாத்தறை, அரியாலை, கொழும்பு, Harrow, United Kingdom

11 Sep, 2025