புத்தர் கோவிலில் கைத்துப்பாக்கியை மறைத்து வைத்து நாடகமாடிய காவல்துறை உத்தியோகத்தர் சிக்கினார்
தமக்கு கடமைக்காக வழங்கப்பட்ட கைத்துப்பாக்கியை காவல்நிலையத்திற்கு முன்பாக அமைந்துள்ள புத்தர் கோவிலில் மறைத்து வைத்து அதனை காணவில்லை என முறைப்பாடு செய்த காவல்துறை கான்ஸ்டபிள் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டதாக வெலிஓயா காவல்துறையினர் குறிப்பிடுகின்றனர்.
கைது செய்யப்பட்ட காவல்துறை கான்ஸ்டபிள் தெரிவித்த தகவலின் அடிப்படையில் அவர் புத்தர் கோவிலில் மறைத்து வைத்திருந்த அதே கைத்துப்பாக்கியை கண்டுபிடித்ததாக அப்பகுதியின் உயர் காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
பகல் கடமைகளுக்காக வழங்கப்பட்ட கைத்துப்பாக்கி
கடந்த 31ஆம் திகதி வெலி ஓயா காவல் நிலையத்தின் பகல் கடமைகளுக்காக வழங்கப்பட்ட கைத்துப்பாக்கி காணாமல் போயுள்ளதாக காவல் நிலைய பொறுப்பதிகாரியிடம் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

இது தொடர்பில் சந்தேகம் ஏற்பட்டதன் காரணமாக காவல்துறை உத்தியோகத்தரிடம் நீண்ட நேரம் நடத்தப்பட்ட விசாரணையில் மறைத்து வைத்திருந்த ஆயுதத்தை கண்டுபிடிக்க முடிந்ததாக காவல்துறை அதிகாரி மேலும் தெரிவித்தார்.
பணி இடைநீக்கம் செய்வதற்கான ஒழுக்காற்று விசாரணை
சந்தேகநபரான கான்ஸ்டபிள் கைத்துப்பாக்கியை வெளிநபர் ஒருவருக்கு விற்பனை செய்வதற்காக எடுத்துச் செல்லும் வரை புத்தர் கோவிலில் மறைத்து வைத்திருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.

பொதுவேட்பாளர் சர்ச்சை : யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் பின்னணியில் அரசியல் : கோவிந்தன் கருணாகரம் விசனம்
இந்த கான்ஸ்டபிளை பணி இடைநீக்கம் செய்வதற்கான ஒழுக்காற்று விசாரணையும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை வட்டாரங்களிலிருந்து தெரியவந்துள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |