பீரிஸ் தொடர்பில் ரணில் எடுக்கவுள்ள அதிரடி நடவடிக்கை - கொழும்பு ஊடகம் வெளியிட்ட தகவல்
G. L. Peiris
Ranil Wickremesinghe
Sri Lanka Podujana Peramuna
By Sumithiran
பறிபோகவுள்ள வெளிவிவகார அமைச்சு
வெளிவிவகார அமைச்சர் பதவியில் இருந்து பேராசிரியர் ஜி.எல்.பீரிஸை நீக்குவதற்கு பதில் அதிபர் ரணில் விக்கிரமசிங்க தயாராகி வருவதாக நம்பகமான வட்டாரங்கள் தெரிவிப்பதாக கொழும்பு ஊடகமொன்று தெரிவித்துள்ளது.
இது தொடர்பான அறிவுறுத்தல்கள் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையிடம் இருந்து கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயர்பீடத்துடன் கலந்துரையாடிய ரணில்
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உயர்பீடத் தலைவர்களுடன் ரணில் விக்கிரமசிங்க ஏற்கனவே கலந்துரையாடியுள்ளதாகவும் தெரியவருகிறது.
ஸ்ரீலங்கா பெரமுனவின் தலைவராக ஜீ.எல். பீரிஸ் நீக்கப்படுவார் என முன்னர் தெரிவிக்கப்பட்டிருந்தது.
பதில் அதிபர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவளிப்பது தொடர்பான விடயத்தில் பொதுஜன பெரமுனவின் செயலாளர் சாகர காரிய வசத்திற்கும் பீரிஜிற்கும் இடையே மோதல் வெடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
