இஸ்ரேலின் அடுத்த இலக்கு : வெளியானது அறிவிப்பு
ஹெஸ்பொல்லா தலைவர் நைம் காசிம் படுகொலை செய்யப்படுவார் என இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் குறிப்பிட்டார்
ஹெஸ்பொல்லா தலைவர் நைம் காசிம் , தமது மற்றொரு இலக்காக மாறிவிட்டதாக இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் தெரிவித்துள்ளார்.
ஹெஸ்பொல்லா அமைப்பின் புதிய தலைவர்
கடந்த ஆண்டு செப்டம்பர் 27 அன்று இஸ்ரேலால் படுகொலை செய்யப்பட்ட ஹெஸ்பொல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லாவிற்கு பின்னர் அமைப்பின் தலைவராக நைம் காசிம் நியமிக்கப்பட்டார்
وزير الدفاع الإسرائيلي:
— الحرب العالمية (@WWIIIAR) March 2, 2026
زعيم حزب الله نعيم قاسم هدف مشروع لنا منذ الآن.
من يسير في طريق علي خامنئي سيلقى المصير ذاته pic.twitter.com/L97RlcFLTc
இதற்கிடையில், அலி கமேனியின் படுகொலைக்கு பழிவாங்கும் விதமாக லெபனான் ஹெஸ்பொல்லா அமைப்பு வடக்கு இஸ்ரேலில் உள்ள ஹைஃபா அருகே உள்ள ஒரு இராணுவ தளத்தின் மீது ரொக்கெட் மற்றும் ட்ரோன் தாக்குதலை நடத்தியதை அடுத்து, இஸ்ரேலிய ஜெட் விமானங்கள் லெபனானில் தொடர்ச்சியான தாக்குதல்களை நடத்தின
லெபனான் மீது தாக்குதல்
இந்தத் தாக்குதல்களில் குறைந்தது 31 பேர் கொல்லப்பட்டதாக வெளிநாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையில், அமெரிக்கா-இஸ்ரேல் கூட்டுத் தாக்குதல்களில் குறைந்தது 555 பேர் கொல்லப்பட்டதாக ஈரானிய செம்பிறை அமைப்பு கூறுகிறது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |