போரில் புதிய திருப்பம் : ஈரானுக்காக களமிறங்கும் சீனா
ஈரான் உச்சதலைவர் அயதுல்லா அலி கமேனி உட்பட பலர் கொல்லப்பட்ட நிலையில் மத்திய கிழக்கில் தாக்குதல்கள் உக்கிரமடைந்துள்ளன.
தமது தலைவர் கொல்லப்பட்டதற்கு பழிவாங்கும் நடவடிக்கையாக மத்திய கிழக்கிலுள்ள நாடுகள் மீது ஈரான் ஏவுகணை தாக்குதலை இடைவிடாது மேற்கொண்டு வருகிறது.
இந்த நிலையில் ஈரானின் இறையாண்மை, பாதுகாப்பு மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டைப் பாதுகாப்பதில் தாம் முழுமையான ஆதரவை வழங்குவதாக சீனா அறிவித்துள்ளது
ஈரானுக்கு முழுமையான ஆதரவு
ஈரானிய வெளிவிவகார அமைச்சருடனான உயர்மட்டப் பேச்சுவார்த்தையின் போது, சீன வெளிவிவகார அமைச்சர் இதனை தெரிவித்துள்ளதாக சீன ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பிராந்தியத்தில் நிலவும் அசாதாரண நிலைமைகளுக்கு மத்தியில் ஈரானின் உள்நாட்டு விவகாரங்களில் வெளிநாடுகளின் தலையீடுகளை நிராகரிப்பதாகவும், ஈரானின் தேசிய நலன்களைப் பாதுகாப்பதில் இராஜதந்திர ரீதியில் சீனா ஒத்துழைப்பு வழங்கும் என்றும் இந்தப் பேச்சுவார்த்தையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
தமிழ்த் தேசிய சக்திகள் ஈரான் விவகாரத்தை உரையாடலுக்கு உட்படுத்துவத வேண்டும் 10 நிமிடங்கள் முன்