பீலேயின் இறுதி ஊர்வலம் - 14 மாடி கட்டடத்துக்குள் நல்லடக்கம் (காணொளி)
உலக கால்பந்து ஜாம்பவானான பீலியின் இறுதி கிரியைகள் எதிர்வரும் ஜனவரி 3ம் திகதி இடம்பெற உள்ளது.
குறித்த இறுதி சடங்கில் அவரது உடல் 14 மாடிகள் கொண்ட சிறப்பு கட்டடம் ஒன்றில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.
82 வயதான புகழ்பெற்ற கால்பந்து வீரர் சாவோ பீலே புற்றுநோயால் பலோவில் உள்ள ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் இஸ்ரேலிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
பீலேவின் இறுதிச் சடங்கு
சிகிச்சை பலனின்றி அவர் கடந்த வெள்ளிக்கிழமை காலை காலமானார். பீலேவின் இறுதிச் சடங்கிற்கான நேரம், திகதி மற்றும் இடம் உள்ளிட்ட விபரங்கள் அந்நாட்டு அரசினால் வெளியிடப்பட்டுள்ளது.
மேலும் 14 மாடி உயரமான தனித்துவமான 'செங்குத்து கல்லறையில்' அவரது உடல் அடக்கம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த இறுதி சடங்கானது நேரலையாக பிரேசிலில் உள்ள பீலே சாண்டோஸ் எஃப்சி, மெமோரியல் நெக்ரோபோல் எக்குமெனிகா, விலா பெல்மிரோ ஸ்டேடியம் ஆகிய கால்பந்து மைதானங்களில் நேரடியாக ஒளிபரப்பாகவுள்ளது.
14 மாடி கட்டடம்
ஜாம்பவானை கௌரவிக்கும் நோக்கில் சாண்டோஸின் தெருக்களில் ஊர்வலம் செல்வதற்கு முன், அவரது உடல் மைதானத்தில் 24 மணி நேரமும் ரசிகர்கள் அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்பட்டுள்ளது.
பிரேசிலின் சாவ் பாலோவிற்கு அருகில் சாண்டோஸில் உள்ள மெமோரியல் நெக்ரோபோல் எக்குமெனிகா என்ற 14 மாடிகள் உயரம் மற்றும் 1.8 ஹெக்டேர் (4.4 ஏக்கர்) பரப்பளவைக் கொண்ட கட்டிடத்துக்குள் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.
அவரது உடல் இறுதியாக மெமோரியல் நெக்ரோபோல் எக்குமெனிகாவில் அடக்கம் செய்யப்படும் எனவும் குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே வளாகத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள் எனவும் அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
?? Le Brésil décrète trois jours de deuil national à la suite de la mort de Pelé ? ⚽️
— Info France 2 (@infofrance2) December 30, 2022
▶️ #JT13h pic.twitter.com/cuKrY2rxBJ


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 2 நாட்கள் முன்
