யாழில் சிக்கிய வர்த்தக நிலையங்கள்: நீதிமன்றம் வழங்கிய உத்தரவு
யாழ். பண்டத்தரிப்பு பொது சுகாதார பரிசோதகர் பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் சுகாதார குறைப்பாடுகளுடன் காணப்பட்ட வர்த்தக நிலையங்களுக்கு 2 இலட்சத்து 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
மல்லாகம் நீதவான் நீதிமன்றில் நேற்று (04.04.2024) இந்தத் தீர்ப்பானது வழங்கப்பட்டுள்ளது. பண்டத்தரிப்பு பொதுச்சுகாதாரப் பரிசோதகர் பிரிவில் இ. யொனிப்பிரகலாதன் தலைமையில் , அப்பகுதிகளில் உள்ள வர்த்தக நிலையங்களில் திடீர் சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இதன் போது , ஒரு வர்த்தக நிலையத்தில் 19 வகையான காலாவதியான பொருட்கள் 245 இணை விற்பனைக்காக வைத்திருந்த வர்த்தக நிலைய உரிமையாளருக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் உரிமையாளருக்கு 95 ஆயிரம் ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டதுடன் , கடையை சீல் வைத்து மூடுமாறும் மன்று உத்தரவிட்டுள்ளது.
பிறிதொரு வர்த்தக நிலையம் ஒன்றில் புழு மொய்த்த, வண்டரித்த அரிசி , கடலைப்பருப்பு என்பவற்றை விற்பனைக்காக காட்சிப்படுத்தி வைத்திருந்த உரிமையாளருக்கு 65 ஆயிரம் ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக செய்திகளை இன்றைய காலை நேர செய்தித் தொகுப்பில் காண்க.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |