கடவுச்சீட்டு பெற காத்திருப்போருக்கு வெளியான நற்செய்தி
நிலுவையில் உள்ள அனைத்து கடவுச்சீட்டுக்களும் ஒரு மாதத்திற்குள் வழங்கப்படும் என்றும், செயல்முறை இயல்பாக்கப்படும் எனவும் பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால (Ananda Wijepala) தெரிவித்துள்ளார்.
அதற்கு தேவையான பணிகள் ஏற்கனவே படிப்படியாக மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.
பொதுப் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சர்கள் ஆலோசனைக் குழு தனது நாடாளுமன்றத்தில் முதன்முறையாக இன்று கூடியபோது அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
யாழில் கடவுச்சீட்டு அலுவலகம்
இதேவேளை, கடவுச்சீட்டு பெறுவதில் பொதுமக்களின் இழந்த நம்பிக்கையை மீட்டெடுப்பதே முதன்மையான நோக்கமாக 24 மணி நேரமும் பயண அனுமதி வழங்கல் தொடங்கப்பட்டதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், கடவுச்சீட்டு அச்சு இயந்திரங்களைப் பெற்ற பிறகு யாழ்ப்பாணத்தில் கடவுச்சீட்டு வழங்கும் அலுவலகம் நிறுவ திட்டமிடப்பட்டுள்ளதாகவும், பிராந்திய அலுவலகங்களில் கடவுச்சீட்டு வழங்குவது இரட்டிப்பாக்கப்படும் என்றும் அமைச்சர் ஆனந்த விஜேபால கூறியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
