காசா மக்களை எதிரியின் கரங்களை நோக்கி தள்ளவேண்டாம் : அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் எச்சரிக்கை
இஸ்ரேலினதும் பாலஸ்தீனத்தினதும் எதிர்காலம் நியாயமான நிரந்தர சமாதானத்திலும் இரண்டுதேசங்கள் தீர்விலும் தங்கியுள்ளதாக அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் பெனிவொங் தெரிவித்துள்ளார்.
காசா - இஸ்ரேல் போர் தொடர்பில் கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்,
அமெரிக்க பாதுகாப்பு செயலாளர்
“காசா மக்களை எதிரியின் கரங்களிற்குள் தள்ளும் விதத்தில் இஸ்ரேல் செயற்படக்கூடாது.
காசாவில் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்கள் என செல்வதற்கான இடங்கள் மிகக்குறைவாகவே உள்ளது.
அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் பயங்கரவாதிகளிற்கு எதிரான நகரப்போர்முறையில் மிகவும் திறமையானவர், ஐஎஸ் அமைப்பிற்கு எதிராக போரிட்ட அனுபவம் உள்ளவர்.
இஸ்ரேலின் உறுதியான ஆதரவாளர் அவர் பொதுமக்களை எதிரிகளின் கரங்களை நோக்கி தள்ளினால் மூலோபாய தோல்வியை சந்திப்பார்.
சமீபத்தைய மோதல் இடைநிறுத்தம் முடிவிற்குவந்தது பாரிய பின்னடைவு.” என சுட்டிக்காட்டியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |