நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியம் இரத்து...! தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்
தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கம் ஆட்சிக்கு வந்தவுடன் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியம் இரத்து செய்யப்படும் என தேசிய அமைப்பாளர் வசந்த சமரசிங்க (wasantha samarasinghe) தெரிவித்துள்ளார்.
பேரணி ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே தேசிய தொழிற்சங்க மத்திய நிலையத்தின் தேசிய அமைப்பாளர் வசந்த சமரசிங்க இதனை குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், முன்னாள் ஜனாதிபதிகளுக்கு எந்த வகையிலும் உதவாது என தேசிய அமைப்பாளர் தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு 05 வருடங்கள் பதவியில் இருந்து ஓய்வூதியம் வழங்கும் நாடு இலங்கை மட்டுமே எனவும் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
அவ்வாறு மக்களின் பணத்தை வீணடிப்பது முட்டாள்தனமான செயல் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, எதிர்வரும் தேர்தல்களில் தமது கட்சி ஆட்சி அமைத்தால் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டு வரும் ஓய்வூதிய கொடுப்பனவு இரத்து செய்யப்படும் என தேசிய மக்கள் சக்தியின் நிறைவேற்றுக்குழு உறுப்பினர் சுனில் ஹந்துநெத்தி (Sunil Handunnetti) தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |