தனியார் ஊழியர்களுக்கும் ஓய்வூதியம்! அரசாங்கம் எடுக்கவுள்ள நடவடிக்கை
தனியார் மற்றும் அரை அரசு துறைகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கு ஓய்வூதியத் திட்டத்தை அறிமுகப்படுத்துவதில் அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாக தொழிலாளர் பிரதி அமைச்சர் மஹிந்த ஜெயசிங்க தெரிவித்துள்ளார்.
நேற்றைய நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்ட போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
ஓய்வூதியத் திட்டம்
தனது சமீபத்திய அறிக்கையை பிரதி அமைச்சர், ஊழியர் சேமலாப நிதி (EPF) மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதி (ETF) ஆகியவற்றுக்கு இடையேயான வேறுபாட்டை தெளிவுபடுத்தியதாகவும், EPF ஓய்வூதியத் திட்டமாக மாற்றப்படும் என்று தான் ஒருபோதும் கூறவில்லை என குறிப்பிட்டுள்ளார்.

தனது அறிக்கை தவறாக புரிந்து கொள்ளப்பட்டதாகவும், EPF சமூகப் பாதுகாப்பு நோக்கங்களுக்காகவே உள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளனர்.
அது அவ்வாறே இருக்க, தனியார் மற்றும் அரை அரசுத் துறைகளில் உள்ள தொழிலாளர்களுக்கு தனி ஓய்வூதியத் திட்டத்தை வழங்குவதில் அரசாங்கம் கவனம் செலுத்துகிறது என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |