கடந்த 24 மணித்தியாலங்களில் 1,057 பேர் கைது
corona
sri lanka
people
By Shalini
தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 1,057 பேர் கடந்த 24 மணிநேரத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர் என பிரதிப்பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண குறிப்பிட்டார்.
மேலும் அண்மைக்காலங்களில் தனிமைப்படுத்தலை மீறியதற்காக கைதாகுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
பயணக்கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட நிலையில் மக்களின் நடமாட்டம் அதிகரித்தே காணப்படுவதாகவும், இதனால் பாதிப்புகளின் எண்ணிக்கையும் குறையாமல் இருப்பது சுட்டிக்காட்டத்தக்க விடயமாகும்.
இவ்வாறு மிறுவோரை கைது செய்ய பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும் தினமும் கைதாகுவோரின் எண்ணிக்கையில் அதிகரிப்பு காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்